செம்மொழி தமிழறிஞர் , வெள்ளைத் தமிழர் என்று அழைக்கப்பெறும் பாப்லி துரை அவர்களின் 65வது நினைவு நாள்.... 09.05.2025
திருக்குறளைத் “தமிழ் வேதம்” என்றவர் யார் தெரியுமா ?
ஹெர்பர்ட் ஆர்தர் பாப்லி
(Herbert Arthur Popley)
Rev. H.A Popley
ஹெர்பர்ட் ஆர்தர் பாப்லி லண்டன் மிஷன், 1900 ஆண்டு மெட்ராஸ் மாகாணத்திற்கு வந்தார். ஈரோட்டின் ஒரு கிறிஸ்தவ மிஷனரி பொறுப்பில் இருந்தார். Y.M.C.A. அகில இந்திய செயலாளராக இருந்தவர் குன்னூர் கூட்டுறவு நகர வங்கி லிமிடெட் இயக்குநராக இருந்தார்.
அன்றைய காலகட்டத்தில் (1923) ஃபிரப் மற்றும் பாப்லி அவர்களும் நிறுவிய பள்ளிக்கூடங்கள் 94ஆகும். இனிமேல் புதிய பள்ளிகளை திறப்பதை விட ஏற்கனவே துவக்கப்பட்டு நடைபெற்று வருகின்ற பள்ளிகளை பலப்படுத்தி ஒருங்கிணைக்க முடிவெடுத்தார்கள். இதன் பயன்னாக பள்ளிகளின் எண்ணிக்கை உயரவில்லை.
ஈரோடு பணித்தளத்திற்கு வந்தவுடன் கல்வி முன்னேற்றத்திற்கு தனது முழுகவனத்தையும் செலுத்தினார். The Music of India மற்றும் ”சிறுவர்களின் மன நூல் : சிறுவர் இயல்பும் அவர் கற்கும் முறையும்” என்ற நூலையும் எழுதியுள்ளார். கர்நாடக இசைப் பாணியில் கிறிஸ்தவ இசைப் பாடல்களை வழங்குவதில் அவரது திறமைக்காகவும் அறியப்பட்டார்
==================
குறள் பணி
================
திருக்குறளின் மொழிபெயர்ப்பாளராக இலக்கியப் பணிகளுக்காகவும், கர்நாடக பாணியில் தமிழ் கிறிஸ்தவ இசையை வழங்குவதில் அவரது திறமைக்காகவும் அறியப்பட்டார் . திருக்குறளை 1931 ஆம் ஆண்டு முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ”Sacred Kural” வெளியிட்டார். மேலும் திருக்குறளை “தமிழ் வேதம்” என அழைத்தார்.
பாப்லி 1960 மே 9 அன்று தனது 81 வயதில் குன்னூரில் காலமானார்.

No comments:
Post a Comment